கிராமசபை கூட்டம்

ஆலங்குளம் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
ஆலங்குளம்,
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஆலங்குளம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர் காத்தம்மாள் பசுபதி ராஜ் தலைமையில் நடைபெற்றது. கீழாண்மறைநாடு ஊராட்சியில் தலைவர் பொன்னுத்தாய் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் வெம்பக்கோட்டை தாசில்தார் ரெங்கநாதன், ஆலங்குளம் வருவாய் ஆய்வாளர் அறிவழகன், கீழாண்மறைநாடு கிராம நிர்வாக அலுவலர் பொற்கொடி ஆகியோர் கலந்துகொண்டனர். இதேபோல் வலையபட்டி, கரிசல்குளம், தொம்பகுளம், ஏ.லட்சுமிபுரம், கல்லமநாயக்கர்பட்டி, குண்டாயிருப்பு, காக்கிவாடன்பட்டி, எட்டக்காபட்டி, முத்துச்சாமிபுரம், கொங்கன்குளம், பி. திருவேங்கடபுரம் ஆகிய ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story






