அரியலூரில் நாளை 201 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்


அரியலூரில் நாளை 201 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
x
தினத்தந்தி 29 April 2023 1:48 PM GMT (Updated: 29 April 2023 2:12 PM GMT)

தொழிலாளர் தினத்தையொட்டி 201 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் அரியலூரில் நாளை நடக்கிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான நாளை (திங்கட்கிழமை) கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு அந்தந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையேற்க வேண்டும். துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராமசபை கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும். மேலும் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, ஆணையரிடம் இருந்து வரப்பெற்ற கூட்ட பொருட்கள் மற்றும் இதர கூட்ட பொருட்கள் விவாதிக்கப்பட வேண்டும். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். அனைத்து துறை வாரியான அலுவலர்கள் தவறாது கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறைத்தொடர்பான திட்டங்கள் பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் கூறிட வேண்டும். கிராம சபை கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரால் (கிராம ஊராட்சிகள்) பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே கிராம சபை கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளனர்.


Next Story