497 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்


497 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
x

497 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் மே 1-ந் தேதி நடக்கிறது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- தொழிலாளர் தினமான மே 1-ந் தேதி காலை 11 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி ஊரகக்குடியிருப்புத்திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நான் முதல்வன் திட்டம் மற்றும் இதரப் பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளன. மேற்குறிப்பிட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களை சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் கலந்து கொண்டு கிராம சபை கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும். இ்வ்வாறு அதில் அவர் கூறினார்.

1 More update

Next Story