201 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தது


201 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தது
x

201 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தது.

அரியலூர்

சுதந்திர தினத்தையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டங்கள், அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடந்தது. இதில் அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுவளூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ரமணசரஸ்வதி கலந்து கொண்டார். கூட்டத்தில் ஊராட்சியில், பொது நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் 2022-23-ம் நிதி ஆண்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் ஊராட்சி வளர்ச்சிப்பணிகளுக்கான திட்ட அறிக்கை கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்கு சமர்பிக்கப்பட்டு ஓப்புதல் பெறப்பட்டது. முன்னதாக, அரியலூர் ஆலந்துறையார் கோதண்டராமசாமி கோவிலில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் கலைவாணி கலந்து கொண்டார்.

1 More update

Next Story