157 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்:15-ந்தேதி நடக்கிறது


157 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்:15-ந்தேதி நடக்கிறது
x

கரூர் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் வருகிற 15-ந்தேதி நடக்கிறது.

கரூர்

கிராம சபை கூட்டம்

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிப்பது, குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பது, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி, சுகாதாரம்.பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியை தடை செய்வது, திட்டங்கள் மற்றும் நிதிக்குழு மான்ய நிதியில் மேற்கொள்ளப்பட்டு, எடுக்கப்பட்டுள்ள பணிகளின் விவரம், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், நீர்வழிப்பாதை மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றுவது.

விவசாயிகள் கடன் அட்டை

மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் -2, கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 மறு-கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் -ஊரகம், பொறுப்புத் துறைகள், இதர பொருட்கள், மக்கள் நிலை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட இலக்கு, மக்கள் பட்டியலில் உள்ள ஏழை, மிகவும் ஏழை மற்றும் நலிவுற்றோர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல், பிரதான் மந்திரி சுரத்ஷா பீமா யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, வறுமை குறைப்புத் திட்டம், இளைஞர் திறன் திருவிழா. ஊராட்சிகளுக்கான கட்டணங்களை இணைய வழியில் செலுத்துவது, கிராம ஊராட்சிகளின் தணிக்கை, வேளாண்மை உழவர் நலத்துறை, விவசாயிகள் கடன் அட்டை, குழந்தைகள் அவசர உதவி எண் மற்றும் முதியோர் உதவி எண் ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது சம்பந்தமாக 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story