கிராம வங்கி ஓய்வு பெற்றோர் சங்க செயற்குழு கூட்டம்


கிராம வங்கி  ஓய்வு பெற்றோர் சங்க செயற்குழு கூட்டம்
x
தினத்தந்தி 24 Sept 2023 12:15 AM IST (Updated: 24 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிராம வங்கி ஓய்வு பெற்றோர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகரில், தமிழ்நாடு கிராம வங்கி ஓய்வு பெற்றோர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் புளுகாண்டி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கணபதி, வழக்கறிஞர் கீதா உள்ளிட்டோர் பேசினர். பின்னர் 1.4.2018-க்கு முன்பாக விருப்ப ஓய்வு, கட்டாய ஓய்வு பணிநீக்கம் மூலம் ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்க அகில இந்திய சங்கம் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும். விடுபட்டு போன ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் விண்ணப்பங்களை பரிசீலித்து ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வருடாந்திர மருத்துவ உதவித்தொகை ரூ.4 ஆயிரம், மருத்துவ பரிசோதனை தொகை ரூ.3ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களில் சேமநலநிதி நிலுவைத் தொகையினை வங்கி சேம நலநிதி கணக்குக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக துணைத்தலைவர் சோலை மாணிக்கம் வரவேற்று பேசினார். சாமுவேல் நன்றி கூறினார்.


Next Story