கிராம சபை கூட்டம்


கிராம சபை கூட்டம்
x

பழையகூடலூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கலெக்டர் லலிதா பங்கேற்பு

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் அருகே பழையகூடலூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பழைய கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.நிவேதா முருகன் எம்.எல்.ஏ., மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரஷ்ணேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை இயக்குனர் முருகண்ணன் வரவேற்றார்.இதில் கலெக்டர் லலிதா, ராமலிங்கம் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும். ஆண்களுக்கு நிகராக பெண்களும் பொருளாதாரத்தில உயர வேண்டும். ஊராட்சியின் வளர்ச்சிக்காக பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றார். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், துணைத் தலைவர் முருகப்பா, ஒன்றிய ஆணையர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.இதேபோல கொள்ளிடம் அருகே ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் தலைமையில் நடந்தது. ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஊராட்சி துணைத் தலைவர் சிவப்பிரகாசம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் கண்ணன் வரவேற்றார். ஊரக வளர்ச்சித் துறையின் மாநில தலைமை பொறியாளர் அரிகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.. இதில் ஒன்றிய பொறியாளர்கள் பலராமன், தாரா பவளசந்திரன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story