வீராபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்


வீராபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
x

வீராபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார்.

செங்கல்பட்டு

கிராம சபை கூட்டம்

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வீராபுரம் கிராமத்தில் காஞ்சீபுரம் எம்.பி. க.செல்வம் மற்றும் செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.

இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் சாலை மேம்பாடு செய்தல், புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, புதிய அங்கன்வாடி மற்றும் ரேஷன் கடை கட்டிடம், மின்சார வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் குழாய்கள் அமைத்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையிலான திட்டங்களின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், 2023-ம் ஆண்டு தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் தீபாவளி பண்டிகையின் சிறப்பு தள்ளுபடி விற்பனையினை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதுபோல குன்னவாக்கம் ஊராட்சியில் தலைவர் சத்யா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அஞ்சூர் ஊராட்சியில் தலைவர் செல்வி தேவராஜ் தலைமையிலும், திம்மாவரம் ஊராட்சியில் தலைவர் நீலமேகம், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் தலைவர் விஜயலஷ்மி துரைபாபு, மேலமையூர் ஊராட்சியில் ஹெலன் சிந்தியா சரவணன் ஆகியோரின் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில்

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள மண்ணிவாக்கம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கஜலட்சுமி சண்முகம் தலைமையில் நடந்தது.

இதேபோல வண்டலூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வி விஜயராஜ், நெடுங்குன்றம் ஊராட்சியில் தலைவர் வனிதா ஸ்ரீ சீனிவாசன், வேங்கடமங்கலம் ஊராட்சியில் தலைவர் கல்யாணி ரவி, காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் தலைவர் நளினி ஜெகன், நல்லம்பாக்கம் ஊராட்சியில் தலைவர் லட்சுமணன், கீரப்பாக்கம் ஊராட்சியில் தலைவர் செல்வ சுந்தரி ராஜேந்திரன், ஊனமாஞ்சேரி ஊராட்சியில் தலைவர் மகேந்திரன், பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் தலைவர் பகவதி நாகராஜன் ஆகியோரின் தலைமையில் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கிராம சபை கூட்டத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்வதற்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Next Story