மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்


மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 22 Jun 2023 11:37 AM GMT (Updated: 22 Jun 2023 11:51 AM GMT)

திருவண்ணாமலை தாலுகா சு.பாப்பாம்பாடி கிராமத்தில் மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் 27-ந் தேதி நடக்கிறது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தாலுகா சு.பாப்பாம்பாடி கிராமத்தில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறை இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இந்த முகாமில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழுநீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள்,

சினை சரிபார்ப்பு, கோழி தடுப்பூசிகள், வெறிநாய் தடுப்பூசிகள், தீவன வளர்ப்பு, சிறு அறுவை சிகிச்சைகள், வகைப்படுத்தப்பட்ட பெண் கன்று உற்பத்திக்கான விந்தணு பிரிந்தறிதல், புல்வளர்ப்பு, தாது கலவை மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

கால்நடை வளர்ப்பில் உண்டாகும் பல்வேறு சந்தேகங்களுக்கு முகாம்களில் பங்கேற்கும் மண்டல இணை இயக்குனர், துணை இயக்குனர், உதவி இயக்குனர்கள், கால்நடை பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் ஆகியோர் பதில் அளிக்கின்றனர்.

மேலும் கிடேரி கன்று பேரணி நடத்தி சிறந்த 3 கன்று வளர்ப்போர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

எனவே சு.பாப்பாம்பாடி கிராமம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள விவசாயிகள் கால்நடை வளர்ப்போர்கள் வருகிற 27-ந் தேதி நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story