மொபட் மீது பஸ் மோதி தாத்தா- பேத்தி சாவு
பெரியநாயக்கன் பாளையம் அருகே மொபட் மீது பஸ் மோதி தாத்தா- பேத்தி பரிதாபமாக இறந்தனர்.
பெரியநாயக்கன் பாளையம் அருகே மொபட் மீது பஸ் மோதி தாத்தா- பேத்தி பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பள்ளி மாணவிகள்
பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த நம்பர் 4 வீரபாண்டி ெரயில் நிலைய ரோடு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி அபிநயா (வயது 17), ஹேமவர்ஷினி (14) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
அவர்கள் பிரஸ் காலனி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். அவர்களை காலையில் பள்ளிக்கு அழைத்து சென்று, மாலையில் வீட்டிற்கு அழைத்து வரும் பணியை அவர்களுடைய தாத்தா ராமசாமி (75) செய்து வந்தார்.
ராமசாமி, நேற்று மாலை 5 மணி அளவில் மொபட்டில் பள்ளிக்கு சென்றார். அங்கு அவர் தனது பேத்திகள் 2 பேரையும மொபட்டியில் ஏற்றிக் கொண்டு கோவை- மேட்டுப்பாளையம் ரோடு சாந்திமேட்டு பகுதி அருகே வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக அந்த அரசு பஸ் திடீரென்று எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.
தாத்தா- பேத்தி சாவு
இதில் தூக்கி வீசப்பட்டு ராமசாமி மற்றும் 2 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஹேமவர்ஷினி, ராமசாமி ஆகியோர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே ஹேமவர்ஷினி, ராமசாமி ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். அபிநயா தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்