நீதிமன்ற ஊழியரை அவதூறாக பேசிய மூதாட்டி கைது


நீதிமன்ற ஊழியரை அவதூறாக பேசிய மூதாட்டி கைது
x

சங்கரன்கோவிலில் நீதிமன்ற ஊழியரை அவதூறாக பேசிய மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தாலுகா பிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம்மாள் (வயது 70). இவர் மீது உள்ள வழக்கு ஒன்றின் விசாரணைக்காக நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த நீதித்துறை நடுவர் மன்ற அலுவலக உதவியாளர் ராமர் மகன் சண்முகையா என்பவரை அவதூறாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சண்முகையா அளித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரம்மாளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story