குமாரபுரம் அருகே மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை


குமாரபுரம் அருகே மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
x

குமாரபுரம் அருகே மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

தக்கலை,

குமாரபுரம் அருகே மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

குமாரபுரம் அருகே உள்ள செம்பருத்திவிளை, ஞாறவிளையை சேர்ந்தவர் லாசர். இவரது மனைவி தேவநேசம் (வயது76). இவர்களது உறவினர் ஒருவர் சமீபத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தார். அதன்பின்பு தேவநேசம் மிகுந்த சோகத்தில் இருந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கொற்றிக்கோடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story