விபத்தில் காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு


விபத்தில் காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு
x

விபத்தில் காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு

நாகப்பட்டினம்

சிக்கல்:

நாகையிலிருந்து திருவாரூருக்கு சரக்கு வாகனத்தில் மீன் விற்பனை செய்வதற்காக கடந்த 25-ந்தேதி டிரைவர் உள்பட 8 பெண்கள் பயணம் செய்தனர். அப்போது கீழ்வேளூர் அருகே குருக்கத்தி அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்தது. இதில் கல்பனா (வயது40) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இதில் படுகாயமடைந்த டிரைவர் உள்பட 8 பேர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி நாகை அக்கரைப்பேட்டை டாட்டா நகரை சேர்ந்த மாரியப்பன் மனைவி பட்டம்மாள் (60) என்பவர் பரிதாபமாக இறந்தார்.


Next Story