சாலை விபத்தில் மூதாட்டி படுகாயம்
சாலை விபத்தில் மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
நொய்யல்,
கந்தம்பாளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி அங்கையர்கன்னி (வயது 60). இவர் கூலி வேலைக்குச் செல்வதற்காக நொய்யல்- வேலாயுதம்பாளையம் நெடுஞ்சாலையில் மலைநகர் முதலாவது பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த குமார் (62) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அங்கையர்கன்னி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து அங்கயர்கன்னியின் மகள் பூர்ணிமா கொடுத்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.