கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்


கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே கிரானைட் கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் பொன்னுமணி தலைமையிலான அதிகாரிகள் கலகோபசந்திரம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். லாரிகளில் கிரானைட் கற்களை கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து 2 லாரிகளையும் அலுவலர்கள் பறிமுதல் செய்து தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story