பர்கூர் அருகே கிரானைட் கற்கள் கடத்திய 4 லாரிகளை போலீசார் பறிமுதல் ெசய்தனர். கடத்திய 4 லாரிகள் பறிமுதல்
பர்கூர் அருகே கிரானைட் கற்கள் கடத்திய 4 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பர்கூர்
பர்கூர் அருகே கிரானைட் கற்கள் கடத்திய 4 லாரிகளை போலீசார் பறிமுதல் ெசய்தனர்.
வாகன சோதனை
பர்கூர் அருகே உள்ள கொண்டப்பநாயனப்பள்ளி, அச்சமங்கலம், ஜெகதேவி, தொகரப்பள்ளி, ஆஞ்சூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட கிரானைட் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு ஆந்திர மாநிலம் குப்பம், சித்தூர் பகுதிகளில் இருந்து கிரானைட் கற்களை கொண்டு வருவது வழக்கம்.
இந்தநிலையில் கிருஷ்ணகிரி கனிம வளத்துறை உதவி இயக்குனர் பொன்னுமணி தலைமையில் அதிகாரிகள் தமிழக-ஆந்திர மாநில எல்லையில் உள்ள கணமூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிரானைட் கற்கள் ஏற்றி வந்த 4 லாரிகளை அலுவலர்கள் சோதனை செய்தனர். அதில் உரிய அனுமதியின்றி கிரானைட் கற்கள் கடத்தியது தெரியவந்தது.
4 லாரிகள் பறிமுதல்
இதுகுறித்து அவர்கள் பர்கூர் போலீஸ் மற்றும் வருவாய்த்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களை தேடி வருகின்றனர். மேலும் கிரானைட் கற்களுடன் 4 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். இந்த லாரிகள் தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.