ஐஸ்கட்டி தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு மானிய உதவி
ஐஸ்கட்டி தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு மானிய உதவி வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மானிய உதவியுடன் ஐஸ்கட்டி தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. அதன்படி (பொது-1, ஆதிதிராவிடர், பழங்குடியினர்-1, மகளிர்-1) 30 டன் மற்றும் (மகளிர்-1) 50 டன் கொள்ளளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 30 டன் கொள்ளளவு கொண்ட ஒரு ஐஸ்கட்டி தொழிற்சாலை அமைப்பதற்கான தொகை ரூ.1.20 கோடி என கணக்கிடப்பட்டு, பொதுப்பிரிவினருக்கு செலவினத்தில் 40 சதவீதம் மானியமாக ரூ.48 லட்சமும், மகளிருக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.72 லட்சமும் வழங்கப்படும்.
50 டன் கொள்ளளவு கொண்ட ஒரு ஐஸ்கட்டி தொழிற்சாலை அமைப்பதற்கான தொகை ரூ.1.5 கோடி என கணக்கிடப்பட்டு, பொதுப்பிரிவினருக்கு செலவினத்தில் 40 சதவீதம் மானியமாக ரூ.60 லட்சமும், மகளிருக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.90 லட்சமும் வழங்கப்படும். முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள மீனவ பயனாளிகள் சம்பந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். இந் தகவலை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.