அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி


அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி
x

கிருஷ்ணராயபுரம் அருகே அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அக்னி சட்டி மற்றும் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கரூர்

அங்காளபரமேஸ்வரி கோவில்

கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டுமகாதானபுரத்தில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி, மலையாள கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருநங்கைகள் வழிபாடு செய்வது வழக்கம்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத சிவராத்திரியில் இருந்து 3 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 16-ம் ஆண்டு திருவிழா கடந்த 18-ந் தேதி சிவராத்திரி முதல் நடைபெற்று வந்தது. அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் இரவு மயான கொள்ளை மற்றும் குட்டி குடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநங்கைகள் பங்கேற்பு

இதையொட்டி அங்காளம்மன் போல் அலங்கரிக்கப்பட்ட திருநங்கை வினோதினியை மேட்டு மகாதானபுரம் பிடாரி அம்மன் கோவிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க அருளோடு அழைத்து வந்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் அசுரர் வடிவில் கர்ப்பிணி உருவம் பதிக்கப்பட்ட பொம்மையை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலையாள கருப்பசாமி அருள் அழைக்கப்பட்டு 10-க்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டியின் ரத்தம் குடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு ஆடி பாடி உற்சாகமாக கலந்து கொண்டனர். மேலும், அக்னி சட்டி மற்றும் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அங்காளபரமேஸ்வரியை தரிசனம் செய்தனர்.


Next Story