புத்தக திருவிழாவிற்கான சாம்பல் நிற அணில் 'லோகா


புத்தக திருவிழாவிற்கான சாம்பல் நிற அணில்  லோகா
x

விருதுநகரில் புத்தக திருவிழாற்கான சாம்பல நிற அணில் ‘லோகா’வை கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டார்.

விருதுநகர்


விருதுநகரில் புத்தக திருவிழாற்கான சாம்பல நிற அணில் 'லோேகா'வை கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டார்.

புத்தக திருவிழா

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி முதல் முறையாக விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் இந்நகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புத்தக திருவிழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

வருகிற 17-ந் தேதி தொடங்கும் இந்த திருவிழா 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தக திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், பிரபல எழுத்தாளர்களின் கருத்தரங்கு, சிறப்பு பட்டிமன்றங்கள், பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், தொல்லியல் துறை அரங்குகள், அரசுத் துறை திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

அனைத்து தரப்பு மக்களும், மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெற திட்டமிட்டு அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் வசித்து வரும் அரிய வகை சாம்பல்நிற அணில் உருவம் ( 'லோேகா') வடிவமைக்கப்பட்டு, விரு, என்று பெயரிடப்பட்ட இலச்சினை ( 'லோேகா') வெளியிடப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆய்வு

மாவட்ட மக்கள் இந்த புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சியை வெற்றியடைய செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக புத்தக திருவிழா நடைபெறும் நகர் கே.வி.எஸ். பள்ளி வளாகத்தில் நடைபெறும் ஏற்பாடுகளை கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானக்கவுரி, கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) பரமானந்த ராஜா மற்றும் அரசு அலுவவர்கள் உடனிருந்தனர்.



Related Tags :
Next Story