பெரிய அய்யனார் கோவில் தேரோட்டம்
மருதன்கோன்விடுதி பெரிய அய்யனார் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அய்யனார் கோவில்
கறம்பக்குடி அருகே உள்ள மருதன்கோன்விடுதியில் பெரிய அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாலடி கருப்பர், காளியம்மன் உள்ளிட்ட தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன. இந்த கோவில் திருவிழா மற்றும் தேரோட்டம் ஆடி மாதம் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 20-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இன்று திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து சாமி கும்பிட்டனர். பெண்கள் மாவிளக்கு ஏற்றியும், பொங்கல் வைத்தும் சாமி தரிசனம் செய்தனர்.
மருதன்கோன்விடுதி பெரிய அய்யனார் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையடுத்து பெரிய அய்யனார் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேரை பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் மருதன்கோன்விடுதி, பள்ளத்தான் மனை, காடுவெட்டுவிடுதி, காட்டாத்தி, உஞ்சியவிடுதி, வம்பன் நால்ரோடு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.