வனத்துறை சார்பில் பசுமைக்குழு கூட்டம்


வனத்துறை சார்பில் பசுமைக்குழு கூட்டம்
x

வனத்துறை சார்பில் பசுமைக்குழு கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வனத்துறை சார்பில் மாவட்ட பசுமைக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி, பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- பசுமை தமிழ்நாடு திட்டம் மூலம் அரசு நிலங்கள், வன நிலங்கள் உள்ளிட்டவைகளில் பல்வேறு துறைகளின் மூலம் மரங்களை நட்டு வளர்க்க உரிய நடவடிக்கை வேண்டும். மரம் வளர்ப்பதின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடத்திலும் பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் இடத்திலும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பல்வேறு திட்டங்களின் மூலம் நடப்பட்ட மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். பல்வேறு காரணங்களுக்காக மரங்களை அகற்றுவது குறித்து விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகள் முழுவதுமாக பரிசீலிக்கப்பட்ட பின்னரே அவற்றை அகற்றுவதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். அவ்வாறு மரத்தை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் ஒரு மரத்தை அகற்றுவதற்கு ஈடாக 10 மரங்கள் நட்டு பராமரிக்க வேண்டும். அவ்வாறு 10 மரங்கள் நடப்படுகிறதா? முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்து வனத்துறையினர் முறையாக தொடர் ஆய்வில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் மற்றும் மாவட்ட பசுமை குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story