கால்நடைகளுக்கு பசுமை தீவனங்களை வழங்க வேண்டும்


கால்நடைகளுக்கு பசுமை தீவனங்களை வழங்க வேண்டும்
x

கால்நடைகளுக்கு பசுமை தீவனங்களை வழங்க வேண்டும் என கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். இதில் அரசு சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் முறையாக செயல்படுத்தபடுகிறதா என்பது குறித்தும், கிராம பகுதிகளில் கால்நடை மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்தும் கால்நடை மருத்துவர்களிடம் கலெக்டர் விரிவாக கேட்டறிந்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஊரக பகுதிகளில் நாட்டு மாடு வளர்ப்பு எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும், கால்நடைகளுக்கு பசுமை தீவனங்களை வழங்க வேண்டும், அப்போது தான் விவசாயிகளுக்கு தேவையான இயற்கை உரம் மற்றும் பஞ்ச கவ்யம் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த இயற்கை உரங்கள் தயாரிக்க முடியும். பசுமை தீவனம் மற்றும் அசோகா உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆடு வளர்ப்பு மூலமாக அதிகப்படியான வருவாய் ஈட்ட முடியும். கிராமப்புற மக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆடு வளர்ப்பு எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கால்நடை உதவி இயக்குனர் உதயகுமார் மற்றும் கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story