சின்னசேலம் அ.தி.மு.க.வினர் நேரில் வாழ்த்து
முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு பிறந்தநாளையொட்டி சின்னசேலம் அ.தி.மு.க.வினர் நேரில் வாழ்த்தினா்.
கள்ளக்குறிச்சி
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குமரகுரு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சின்னசேலம் நகர செயலாளர் ராகேஷ், மாவட்ட துணை செயலாளர் உமா ஜெயவேல், முன்னாள் மாவட்ட பிரதிநிதியும், சின்னசேலம் பாரத் கியாஸ் உரிமையாளருமான ஜெயவேல் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருவிற்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது சின்னசேலம் பேரூராட்சி கவுன்சிலர் பிரபு, அன்புத்தமிழன், சின்னதுரை மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். முன்னதாக சின்னசேலத்தில் உள்ள கோவில்களில் முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story