முதல்-அமைச்சரிடம் வாழ்த்து


முதல்-அமைச்சரிடம் வாழ்த்து
x

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக 6-வது முறையாக தேர்வு செய்யப்பட்ட இரா.ஆவுடையப்பன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

திருநெல்வேலி

அம்பை:

தி.மு.க. உட்கட்சி தேர்தலில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளராக இரா.ஆவுடையப்பன் 6-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து சென்னையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் முன்னிலையில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.



Next Story