பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறையில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 125 மனுக்கள் பெறப்பட்டன.
மயிலாடுதுறையில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 125 மனுக்கள் பெறப்பட்டன.
குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் கோரி 23 மனுக்களும், வேலைவாய்ப்புகோரி 22 மனுக்களும் பெறப்பட்டன.
முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவை உதவித் தொகைகோரி 30 மனுக்களும், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 18 மனுக்களும், அடிப்படை வசதிகோரி 12 மனுக்களும் உள்பட மொத்தம் 125 மனுக்கள் பெறப்பட்டன.
நடவடிக்கை விவரங்கள்
இந்த கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.கூட்டத்தில், உதவி ஆணையர் (கலால்) நரேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.