தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-நாளை மறுநாள் நடக்கிறது
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட தாலுகாகளை சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடத்த மாவட்ட கலெக்டர் சாந்தி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு தர்மபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட தாலுகாகளை சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான, குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு உதவி கலெக்டர் கீதா ராணி தலைமை தங்குகிறார். இதில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தர்மபுரி உதவி கலெக்டர் கீதா ராணி தெரிவித்துள்ளார்.
Next Story