தென்மண்டல அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் முகாம்


தென்மண்டல அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்மண்டல அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் முகாம் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளது.

மதுரை

தென்மண்டல அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் முகாம் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை வருகிற 16-3-2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதன்படி அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் தாமதம், ஓய்வூதிய பலன்கள் கிடைக்க பெறாதவர்களின் குறைகள், ரெயில்வே மற்றும் தொலைபேசி துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்று அஞ்சல் துறையின் மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் குறைகள் பரிசீலிக்கப்படும். கோட்ட அளவில் ஏற்கனவே மனு கொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதிலில் திருப்தி அடையாதவர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பிவைக்க வேண்டும். இம்முகாமிற்கு நேரடியாக அனுப்பப்படும் புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. மேலும் முகாமில் கலந்து கொள்ள 19-4-2023 அன்று காலை 11 மணிக்கு பணியிட கணினி பயிற்சி மையம், அஞ்சல்துறை தலைவர் அலுவலகம், தென்மண்டலம் மதுரை என்ற முகவரிக்கு நேரில் வரவும். நேரில் வரமுடியாத ஓய்வூதியதாரர்கள் அன்று மாலை 3 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடத்தப்படும் முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த தகவலை மதுரை தென்மண்டல அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகம், கணக்கு அதிகாரி பொற்கொடி தெரிவித்துள்ளார்.


Next Story