மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 11 May 2023 6:45 PM GMT (Updated: 11 May 2023 6:45 PM GMT)

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல் வரவேற்றார். தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, துணை தலைவர் இந்தியன் செந்தில் தலைமை தாங்கினர். வட்டாட்சியர் சாந்தி, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் சிங்கம்புணரி ஆனந்த், தேவகோட்டை ரத்தினவேல் பாண்டியன், காரைக்குடி ஜெயலட்சுமி, திருப்பத்தூர் கண்ணதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜு, தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், துணை செயலாளர் சிவபுரி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதார் பதிவு மேற்கொள்ளப்பட்டு வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான ெரயில் மற்றும் பஸ் பயண சலுகை, உதவித்தொகைக்கான பதிவு, முதல் அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை பதிவு, உதவி உபகரணங்களுக்கான பதிவு செய்யப்பட்டது. முகாமில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள், வருவாய் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வடசிங்கம்புணரி கிராம நிர்வாக அலுவலர் நடராஜன், தென் சிங்கம்புணரி கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள், மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.


Next Story