போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்

நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
கன்னியாகுமரி
நாகர்கோவில்:
நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமில் போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்தும் தீர்வு காணப்படாதவற்றுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் புதன்கிழமையான நேற்றும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது அங்கு பணி அமர்த்தப்பட்டிருந்த போலீசார் விசாரித்து தீர்வு கண்டனர்.
Related Tags :
Next Story






