7-ந் தேதி முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 7-ந் தேதி நடக்கிறது.
புதுக்கோட்டை
முன்னாள் படை வீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 7-ந் தேதி பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக காலை 11.30 மணியளவில் கொடிநாள் தேநீர் விருந்து உபசரிப்பு விழா நடத்தப்படவுள்ளது. கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், விதவையர்கள் மற்றும் படைவீரர்களை சேர்ந்தோர் அவர்களின் குறைகள் குறித்த மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக வழங்கலாம். மனு அளித்திட விரும்பும் முன்னாள் படைவீரர், விதவையர் அவர்களது கோரிக்கை குறித்த மனுக்களை, இரட்டைப்பிரதிகளில், அடையாள அட்டை நகலுடன் வழங்க வேண்டும். மேலும் மனு அளிக்க விரும்பும், முன்னாள் படைவீரர்கள் காலை 11 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்களது மனுக்களை பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story