ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்


ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2023 6:45 PM GMT (Updated: 7 Oct 2023 6:46 PM GMT)

மயிலாடுதுறை மாவட்ட ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் 10-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி மேல்நிலைப் பள்ளி கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியதாரர்களின் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட கருவூல அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story
  • chat