தூய்மை பணியாளர்களுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும்


தூய்மை பணியாளர்களுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும்
x

தூய்மை பணியாளர்களுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும் என திராவிட தமிழர் கட்சி மாநில தலைவர் வலியுறுத்தி உள்ளார்.

விருதுநகர்


விருதுநகரில் திராவிட தமிழர் கட்சியின் மாநில தலைவர் வெண்மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்திற்கு ஒப்புதல் தர மறுக்கும் கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். ராகுல் காந்தி பதவி பறிப்பு நடவடிக்கை அரசியல் சட்டத்திற்கு எதிரான கருத்துரிமைக்கு எதிராக தொடுக்கப்பட்ட போராகும். எனவே தேர்தல் கமிஷன் இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகத்தினர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களால் பல்வேறு இன்னல்கள் ஏற்படும் நிலையில் அவர்கள் குறைதீர்க்க கலெக்டர் தலைமையில் மாதந்தோறும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும். பெரியார் சமத்துவ புரத்தில் வீடு ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பொதுவில் தனி சுடுகாடு அமைப்பை தவிர்த்து பொதுச்சுடுகாடு அமைக்க வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மீண்டும் மத்திய அரசுக்கு திரும்ப அனுப்பப்படும் நிலை உள்ளதால் அதனை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதை தொடர்ந்து நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story