குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு ஓய்வூதியர்கள் கோரிக்கை மனுக்கள் அனுப்பலாம


குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு  ஓய்வூதியர்கள் கோரிக்கை மனுக்கள் அனுப்பலாம
x

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு ஓய்வூதியர்கள் வருகிற 6-ந்தேதிக்குள் கோரிக்கை மனுக்களை அனுப்பலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தில் தமிழக அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள் நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவது தொடர்பான குறைகளை பரிசீலனை செய்யும் பொருட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 15-ந்தேதி காலை 10 மணியளவில் நடக்கிறது.

மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் சென்னை ஓய்வூதிய இயக்குனர், மாவட்ட கருவூல அலுவலர் ஆகியோர் பங்கேற்கின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வூதிய சங்கங்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டருக்கு வருகிற 6-ந்தேதிக்குள் (புதன்கிழமை) அனுப்பி வைக்கலாம். மேலும், குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் ஓய்வூதியர்கள், ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story