ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம்


ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x

நாமக்கல்லில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் அடுத்த மாதம் நடக்கிறது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் அடுத்த (அக்டோபர்) மாதம் 13-ந் தேதி காலை 10.30 மணியளவில் நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்குகிறார். சென்னை ஓய்வூதிய இயக்குனராக அலுவலர்கள் முன்னிலை வகிக்க உள்ளனர்.

எனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களது குடும்ப ஓய்வூதியர்கள் குறைகள் ஏதேனும் இருந்தால் தேவையான இணைப்புகளோடு விண்ணப்பங்களை வருகிற 22-ந் தேதிக்குள் கலெக்டரின் நேர்முக உதவியாளருக்கு (கணக்குகள்) அனுப்பி வைக்கலாம். அதில் கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் விண்ணப்பங்களை அனுப்பிய ஓய்வூதியர்கள் தவறாமல் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். அவ்வாறு கலந்து கொள்ள முடியாதவர்கள், அவர்களின் சார்பாக ஒருவரை கூட்டத்திற்கு அனுப்பி குறைகளை நீக்க முறையிடலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story