தபால்துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம்


தபால்துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x

தபால்துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 27-ந் தேதி கோவையில் நடைபெறுகிறது.

நாமக்கல்

நாமக்கல் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை தலைமை தபால் நிலைய வளாகத்தில் உள்ள போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்தில் அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது. அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சேவை பெறுவதில் குறைகள் ஏதேனும் இருப்பின் தங்களது புகார்களை உதவி இயக்குனர், மேற்கு மண்டலம், கோவை - 641002 என்கிற முகவரிக்கு வருகிற 25-ந் தேதிக்குள் சென்றடையுமாறு அனுப்பலாம். புகார் அனுப்பும் அஞ்சலக உறையின் மீது "அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் மனு சம்பந்தமாக" என்று எழுதப்பட வேண்டும்.

குறைத்தீர்க்கும் கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு புகார்கள் தெரிவிக்க விரும்பினால், நேரடியாகவும் கலந்து கொள்ளலாம். புகார் கடிதத்தில் முழு தகவல்களும் குறிப்பிடப்பட வேண்டும். அதாவது அனுப்பும் முகவரி, அனுப்பிய முகவரி, ரெஜிஸ்டர் தபால் அல்லது ஸ்பீடு போஸ்ட் அல்லது மணியார்டர் எண், எந்த அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது மற்றும் அனுப்பப்பட்ட தேதியையும் குறிப்பிட வேண்டும். புகார்கள் சேமிப்பு கணக்கில் அல்லது அஞ்சல் ஆயுள் காப்பீட்டில் இருப்பின், அதன் அக்கவுண்ட் நம்பர், பாலிசி நம்பர், முகவரி மற்றும் எந்த அலுவலகத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story