விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

நாமக்கல் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் கோட்ட அளவில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாமக்கல் உட்கோட்டத்தில் உள்ள நாமக்கல், மோகனூர், சேந்தமங்கலம், ராசிபுரம் மற்றும் கொல்லிமலை ஆகிய அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நாமக்கல் உதவி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் உதவி கலெக்டர் சரவணன் தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீனதொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் மனுக்களாக அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

1 More update

Next Story