போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்
x

திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஆர்பர்ட் ஜான் தலைமையில் நடந்தது. இதில், ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து அதன் மீது திருப்தி இல்லாத 12 மனுக்கள் மற்றும் புதியதாக 33 மனுக்கள் என மொத்தம் 45 மனுக்களை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிண்டு சம்மந்தப்பட்ட போலீசாரிடம் உரிய ஆலோசனைகளை வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

திருப்பத்தூர் சக்தி நகரை சேர்ந்த ராமு என்பவர் அளித்துள்ள மனுவில் கடந்த 2018-ம் ஆண்டு அமைச்சராக இருந்த நீலோபர்கபிலிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்த வாணியம்பாடி திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராபியா கவுல் மற்றும் அவரது கணவர் சிராஜ் ஆகிய 2 பேரும், எனது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் பெற்றுக் கொண்டனர். ஆனால் வேலை வாங்கித்தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டால் ஆட்சி மாறிவிட்டது. பணத்தை திருப்பித்தர முடியாது என கூறுகின்றனர். எனவே உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.


Next Story