தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில் குறைதீர்க்கும் முகாம்


தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில் குறைதீர்க்கும் முகாம்
x

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மண்டல அலுவலகம் சார்பில் குறைதீர்க்கும் முகாம் 12 மாவட்டங்களில் 27-ந் தேதி நடக்கிறது.

திருச்சி

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மண்டல அலுவலகம் சார்பில் குறைதீர்க்கும் முகாம் 12 மாவட்டங்களில் 27-ந் தேதி நடக்கிறது.

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திருச்சி மண்டல அலுவலக ஆணையர் முருகவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குறைதீர்க்கும் முகாம்

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மற்றும் இதர விதிகள் சட்டம், 1952-ன் கீழ் வரும் முதலாளிகள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஜூன்-2023 மாதத்திற்கான நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சி (குறைதீர்க்கும் முகாம்) வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு, திருச்சி மண்டல அலுவலகத்தின் அதிகார வரம்புக்குட்பட்ட திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 12 மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடக்கிறது.

மேற்கண்ட மாவட்டங்களில் வசிக்கும் மற்றும் திருச்சி மண்டல அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பி.எப். ஓய்வூதியம் தொடர்பான குறைகளை கொண்ட அனைத்து உறுப்பினர்கள்/ஓய்வூதியம் பெறுவோர் 27-ந் தேதி குறிப்பிட்ட மாவட்டத்தின் கீழ் வரும் அந்தந்த இடத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிவர்த்தி செய்யலாம். 12 மாவட்டங்களிலும் முகாம் நடைபெறும் இடங்கள் வருமாறு:-

நடைபெறும் இடங்கள்

திருச்சி-மண்ணச்சநல்லூர் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் மண்ணச்சநல்லூர், புதுக்கோட்டை- குட்ஹூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 156, சீனிவாசாநகர், 5-வது தெரு, மச்சாவடி, புதுக்கோட்டை. அரியலூர்-ஏ.வி.கே.திருமணமண்டபம், செட்டியார்தெரு, உடையார்பாளையம், அரியலூர் மாவட்டம், பெரம்பலூர்- பெரம்பலூர் சர்க்கரை ஆலை பெரம்பலூர், கரூர்-அருள்முருகன் பாலிடெக்னிக் கல்லூரி தென்னிலை, தஞ்சை-ஆர்.டி.பி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாலியமங்கலம் மெயின்ரோடு, பாபநாசம், தஞ்சை மாவட்டம், திருவாரூர்-T.848 மன்னார்குடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிமிடெட், மன்னார்குடி திருவாரூர், நாகப்பட்டினம்- வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி நாகப்பட்டினம், மயிலாடுதுறை- பி.டி.ஓ.அலுவலகம் மயிலாடுதுறை, விழுப்புரம்- பொதுமேலாளர் அலுவலகம் மாவட்ட தொழில்மையம் கலெக்டர் பெருந்திட்ட வளாகம் விழுப்புரம், கடலூர்-கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிஎண்.1, கடற்கரை சாலை புதுப்பாளையம் கடலூர், கள்ளக்குறிச்சி-ஏ.கே.டி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நீலமங்கலம் கள்ளக்குறிச்சி மாவட்டம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story