மின்வாரிய கோட்ட அலுவலகங்களில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்


மின்வாரிய கோட்ட அலுவலகங்களில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
x

மின்வாரிய கோட்ட அலுவலகங்களில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

திருச்சி

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி பெருநகரம் மேற்பார்வை பொறியாளர் பிரகாசம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த கோட்ட அலுவலகங்களில் இந்த மாதம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. கூட்டம் நடைபெறும் இடங்கள் விவரம் வருமாறு:-

துறையூர் கோட்டத்தில் நாளையும்(செவ்வாய்க்கிழமை), ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 9-ந் தேதியும், லால்குடி கோட்டம் 13-ந் தேதியும், திருச்சி கிழக்கு 16-ந் தேதியும், திருச்சி நகரிய கோட்டத்தில் 20-ந் தேதியும், மணப்பாறை கோட்டத்தில் 27-ந் தேதியும் கூட்டம் நடக்கிறது. மேற்குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும் கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story