முன்னாள் படைவீரர்களுக்கான குறை தீர்வு கூட்டம்
ராணிப்பேட்டையில் முன்னாள் படைவீரர்களுக்கான குறை தீர்வு கூட்டம் 26-ந் தேதி நடக்கிறது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர் மற்றும் அவர்களை சேர்ந்தோர்களுக்கான இரண்டாம் காலாண்டிற்கான சிறப்பு குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்தம் குடும்பத்தைச் சேர்ந்தோர்கள் படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் மனுக்கள் ஆகியவற்றின் இரண்டு நகல்களுடன் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story