ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம்- காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின் அதற்கான முறையீட்டினை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருக்கு வரும் 10-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஓய்வூதியர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30-ந்தேதி அன்று நடைபெறும். ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின் அதற்கான முறையீட்டினை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருக்கு வரும் 10-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இக்கூட்டத்தில் முறையீடுகளை அளிக்கும் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களின் சார்பாக ஒரு சங்கத்திற்கு ஒரு நிர்வாகி வீதம் கலந்து கொள்ளலாம். 10-ந்தேதி வரை பெறப்படும் முறையீடுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் வரும் 30-ந்தேதி நடைபெறும் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நடவடிக்கை விவரம் தெரிவிக்கப்படும். எனவே ஓய்வூதியர்கள் தங்களது முறையீடுகளை மேற்குறிப்பிட்ட தேதிக்குள் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.