மாநகராட்சியில் குறைதீர்க்கும் கூட்டம்
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது.
மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் முன்னிலை வகித்தார். இதில் மேயர் கல்பனா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.
இதில் கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கம் அளித்த மனுவில், கோவை மாநகரில் உள்ள குளங்களில் நாங்கள் மீன் பிடித்து உக்கடம் புதிய மீன் மார்க்கெட் பகுதியில் தரையில் அமர்ந்து விற்பனை செய்து வருகிறோம்.
தற்போது புல்லுக்காட் டில் மீன்மார்க்கெட் கட்டப்பட்டு வருவதால் எங்களுக்கு கடை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
கோவை மாநகர சாலை பயனாளர்கள் சங்கம் அளித்த மனுவில் காந்தி பூங்கா பகுதியில் இருந்து தொடங்கும் தடாகம் சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
பீளமேடு ஸ்ரீராம் நகரை சேர்ந்த பொதுமக்கள் உதயகுமார் தலை மையில் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் கழிவுநீர் முறையாக வெளியேறவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
எனவே கழிவுநீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் மொத்தம் 47 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவிட்டார்.