ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27-வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1-1-2023-ந் தேதி முதல் நடைபெறும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் அனைத்து பணிகளுக்கும் குறைகளை தீர்ப்பதற்காக ரமேஷ் என்பவர் குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் செல்போன் எண்-89258 11308 மற்றும் மின்னஞ்சல் முகவரி ombudsperson.kallai@gmail.com. ஆகும். எனவே பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருந்தால் குறைதீர்ப்பாளரின் செல்போன் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.