கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணி


கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணி
x

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணி தொடங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-23 ஆண்டுக்கான சிறப்பு அரவை பருவம் மற்றும் 2023-24 ஆண்டுக்கான முதன்மை அரவை பருவத்துக்கான தொடக்க விழா ஆலை வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் அரவிந்தன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் (பொறுப்பு) சன்யாசி, ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் அசோக்குமார், பெருமாள், பாரதிதாசன், மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை, சங்கராபுரம் ஒன்றியக்குழு துணை தலைவர் அஞ்சலை கோவிந்தராஜ், மாவட்ட கவுன்சிலர் அஸ்வினிசெந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் ஷ்ரவன்குமார், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு கரும்பு அரவை பணியை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து ஆலை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பெட்ரோல் பங்க்கை அவர்கள் திறந்து வைத்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story