நாமக்கல் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.89 ஆயிரத்தில் உதவி உபகரணங்கள் கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்


நாமக்கல் குறைதீர்க்கும் கூட்டத்தில்  மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.89 ஆயிரத்தில் உதவி உபகரணங்கள்  கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்
x

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.89 ஆயிரத்து 715 மதிப்பிலான உதவி உபகரணங்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.89 ஆயிரத்து 715 மதிப்பிலான உதவி உபகரணங்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது. இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 204 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கடந்த 19-ந் தேதி வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், பழந்தின்னிப்பட்டி ஊராட்சியில் கலெக்டர் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது, நடேசன் என்கிற மாற்றுத்திறனாளி மூன்று சக்கர சைக்கிள் வழங்க வேண்டி கலெக்டரிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி உள்பட 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.36 ஆயிரத்து 200 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.36 ஆயிரத்து 140 மதிப்பிலான காதொலி கருவி உள்பட மொத்தம் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.89 ஆயிரத்து 715 மதிப்பிலான உதவி உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.

நிவாரண நிதி

மேலும் கொந்தளம் காவிரி ஆற்றில் மாணிக்கநத்தம் கிராமத்தை சேர்ந்த தேன்நிலா என்பரின் மகன் நவீன்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், உதவி ஆணையர் (கலால்) தேவிகாராணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமுருகதட்சணாமூர்த்தி உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story