மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x

மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர். இதில் கலந்து கொண்ட தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. குத்தாலம் கல்யாணம், மணல்மேட்டில் மூடப்பட்ட கூட்டுறவு பஞ்சாலையை மீண்டும் திறக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் பதில் அளித்தார். கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித் தொகை உள்பட 107 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.


Next Story