மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. கூட்டத்தில், 159 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.முன்னதாக, வேளாண்மை இணை இயக்குநர் ஜெ.சேகர் கடந்த 2018-ம் ஆண்டு கொடிநாள் நிதி ரூ.3.லட்சம் சேகரித்து சாதனை படைத்ததற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளரால் வழங்கப்பட்ட வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டு் சான்றிதழை கலெக்டர் லலிதா காட்டி பாராட்டு பெற்றார். கூட்டத்தில், மாவட்டவருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி ஆணையர் (கலால்) நரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.