பழக்கடை ஊழியர் பலி

பழக்கடை ஊழியர் பலி
கோவை, ஜூலை
கோவை கரும்புக்கடை சேரன் நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 38). இவர் சவுரி பாளையத்தில் உள்ள பழக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 11.15 மணி அளவில் ஷாஜகான் தன்னுடைய மகன் முகம்மது சுகைலுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.கரும்புக்கடை அருகே வரும்போது கேரளாவை நோக்கி தேயிலை பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரி டிரைவர் கிறிஸ்டோபர் திடீரென்று பிரேக் போட்டுள்ளார்.
அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த ஷாஜகான் மோட்டார் சைக்கிளுடன் லாரியில் மோதி கீழே விழுந்துசம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மகன் முகமதுசுகைல் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய் பிரிவு இன்ஸ்பெக்டர் சரோஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்து நடந்த பகுதியை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்து விபத்து தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆலோசனை வழங்கினார்.






