புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு சீல்


புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு சீல்
x

புகையிலை பொருட்களை விற்ற மளிகை கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமத்திற்குட்பட்ட வடக்கு மாதவி ரோட்டில் உள்ள சமத்துவபுரத்தில் லதா என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது பெரம்பலூர் போலீசாரால் கடந்த 14-ந்தேதி கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் உணவு பாதுகாப்புத்துறையின் கூடுதல் ஆணையரின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வழிக்காட்டுதலின் பேரில், பெரம்பலூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அந்த மளிகை கடையின் உணவு பாதுகாப்பு பதிவு எண்ணை ரத்து செய்து, கடையை பூட்டி சீல் வைத்தார்.


Next Story