திருமணம் ஆன 5 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை


திருமணம் ஆன 5 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை
x

திருமணம் ஆன 5 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்

திருவிடைமருதூர் அருகே திருமணம் ஆன 5 நாளில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொைல செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கோவில் சன்னாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரசாத்(வயது30). இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். கடந்த சிலநாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 5-ந்தேதி இவருக்கும், பந்தநல்லூர் காமாட்சிபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

தூக்குப்போட்டு தற்கொலை

கடந்த 2 நாட்களாக பிரசாத் தனது மனைவியுடன் சரியாக பேசாமல் மது அருந்தி வந்துள்ளார். இதனை பிரசாத் குடும்பத்தினர் கண்டித்தனர்.

இதனால் மனமுடைந்த பிரசாத் வீட்டின் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு, தூக்குப்போட்டு கொண்டார். இதனை அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு திருவிடைமருதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

சோகம்

இதுபற்றி திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 5 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story